2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

குளவி கொட்டியதில் 10 பேர் பாதிப்பு

Super User   / 2013 ஜூலை 28 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்தவர்கள் மீது குளவி கொட்டியதில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் நான்குபேர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுதிக்கப்பட்டுள்ளனர். தெல்லிப்பளை மாத்தனை பெரியதம்பரான் குளத்தடியில் உள்ள தோட்டப் பகுதியில் இந்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில்  இடம் பெற்றுள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டு சின்னத்தம்பி செல்வேந்திரா வயது 55 கந்தசாமி கமல்ராஜ் வயது 37 செல்வராசா கமலக்கண்ணன் வயது 44 சங்கரப்பிள்ளை சசிகரன் வயது 28 ஆகியோரே அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X