2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மாணவன் கொலை; 3ஆவது சந்தேகநபருக்கும் விளக்கமறியல்

Menaka Mookandi   / 2014 நவம்பர் 03 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் வைத்து யாழ்.இந்து கல்லூரி மாணவன் சண்முகநாதன் யதுசன் (வயது 20) கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்றாவது சந்தேகநபரை எதிர்வரும் 12ஆம் திகதி வஇர் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் சி.சதீஸ்கரன் ஞாயிற்றுக்கிழமை (02) உத்தரவிட்டார்.

இந்த கொலை தொடர்பில் ஏற்கனவே இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மூன்றாவது சந்தேகநபர், சனிக்கிழமையன்று (01) கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் வைத்து யாழ்ப்பாண விசேட பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டார்.

முதல் இரண்டு சந்தேகநபர்களும் வழங்கிய தகவலின் அடிப்படையில் மூன்றாவது சந்தேகநபரான சாவகச்சேரியைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார்.

மேற்படி மாணவனின் வீட்டுக்குள் கடந்த 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நுழைந்த ஆயுததாரிகள், மாணவனையும் அவனது தந்தை, தாயையும் கோடாரியால் தாக்கிவிட்டு வீட்டிலிருந்த பொருட்களையும் கொள்ளையடித்து சென்றனர். இதில் மாணவன் உயிரிழந்ததுடன் பெற்றோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பிலான விசாரணைகளை முதலில் சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வந்ததுடன், மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் விசேட பொலிஸ் குழுவொன்றிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர்கள் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஐவர் இனங்காணப்பட்டனர். அவர்களை கைது செய்ய முற்பட்ட வேளையில் அவர்கள் தப்பிச் சென்று வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் தலைமறைவாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் அவர்களின் 27 மற்றும் 32 வயதுடைய இரு சந்தேகநபர்கள், கடந்த ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி சுழிபுரம் பகுதியில் வைத்து  கைது செய்யப்பட்டு தொடர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .