2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

குழப்பம் விளைவித்தவர்கள் கைது:6 பேருக்கும் விளக்கமறியல்

Menaka Mookandi   / 2014 ஜூன் 15 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

நெடுந்தீவு அந்தோனியார் ஆலயத்தின் கணக்கறிக்கை தொடர்பான கூட்டத்தினை நடத்தவிடாது குழப்பம் விளைவித்த 6 பேரை எதிர்வரும் திங்கட்கிழமை (16) வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன் உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி நபர்களை சனிக்கிழமை (14) கைது செய்ததாக நெடுந்தீவு குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மேற்படி அந்தோனியார் ஆலயத்தின் கணக்கறிக்கை தொடர்பான கூட்டம் யாழ்.ஆயர் இல்ல குருமார்கள் முன்னிலையில் சனிக்கிழமை (14) இடம்பெற்றது.

இக்கூட்டத்தின் போது ஆலய நிதியில் பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளமை தெரியவந்தமை தொடர்பாக ஆயர் இல்லக்குருமார்கள் தெரிவித்ததுடன் இதற்கான காரணத்தையும் வினவியுள்ளனர்.

இதன் போது அந்த கூட்டத்தில் இருந்த சிலர் கூட்டத்தினைக் குழப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து, நெடுந்தீவு 11ம் வட்டாரத்தினை சேர்ந்த 2 பேரையும், 4ம் வட்டாரத்தினை சேர்ந்த 4 பேரையும் நெடுந்தீவு குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்து ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .