2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யாழ். குடாநாட்டில் 60 வீதமான நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல்

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 26 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாநாட்டில் 60 வீதமான நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலகத்தில் இயங்கும் மிதிவெடிச் செயற்பாட்டு அலுவலகம் இன்று செவ்வாய்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ். குடாநாட்டில் 51,503,136 சதுர நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் இருப்பதாக கணிப்பீடு செய்யப்பட்டது. இதில் தற்போது 31,263,216 சதுரநிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன.

இதேவேளை 20,239,920 சதுரநிலப்பரப்பில் தற்போது கண்ணிவெடிகள் அகற்றும் நடவடிக்கைகள் நடைபெற்றுவருவதாகவும் இன்னும் 17,333,729 சதுர நிலப்பரப்பு, கண்ணிவெடிகள் அகற்றப்படாத பிரதேசமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பிரதேசங்களில் இருந்து 89 ஆயிரத்து 687 மிதிவெடிகள், 152 பல்குழல் எதிர்ப்பு கண்ணிவெடிகள், 91 ஆயிரத்து 386 வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக மிதிவெடி செயற்பாட்டு அலுவலகத்தின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X