2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

நெல்லியடி விபத்தில் 7 இராணுவத்தினர் உட்பட 10பேர் காயம்

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 29 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரொமேஸ் மதுசங்க


யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியின் நெல்லியடி பொலிஸ் பிரிவில் இராணுவ டிரக் வண்டியொன்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 7 இராணுவ வீரர்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்துக்குள்ளான பஸ், அதி வேகமாகப் பயணித்தமையே இந்த விபத்துக்குக் காரணம் என விசாரணைகளிலிருந்து தெரியவந்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

வுப்பத்தின் போது, குறித்த பஸ்ஸில் பெருமளவான பயணிகள் பயணம் செய்துகொண்டிருந்தனர் என்றும் இவர்களில் மூவர் மாத்திரம் விபத்தின் போது காயமடைந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். விபத்து தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X