2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

உள்ளூர் மீனவர்கள் 79பேர் கைது

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 23 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

யாழ். மாவட்டத்தில் இந்த வருடத்தின் இந்நாள் வரையில் 79 உள்ளூர் மீனவர்கள் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள பிரதிப் பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி வியாழக்கிழமை (23) தெரிவித்தார்.

தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி தண்டங்கள் விதிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், இந்த வருடத்தில் 79 மீனவர்களும் எதிராக 8 இலட்சத்து 80 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்துவதன் மூலம் கடல் வளம் பாதிக்கப்படுவதுடன் மீன் பெருக்கமும் தடைப்படுகின்றது. இதனை உணர்ந்து உள்ளூர் மீனவர்கள் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .