2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

05 மீனவர்கள் கைது

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 07 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

யாழ். பருத்தித்துறைமுனை இறங்குதுறையில் ஞாயிற்றுக்கிழமை  (06) இரவு பருத்தித்துறையைச்; சேர்ந்த 05  மீனவர்களை கைதுசெய்த  பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர், இவர்களை  வவுனியாவுக்கு  கொண்டு சென்றுள்ளதாக  பருத்தித்துறை பொலிஸார் இன்று (07) தெரிவித்தனர்.

அத்துடன், மேலும் ஒரு மீனவரையும்  தேடி வருவதாகவும்; பொலிஸார் கூறினர்.

பத்திரிநாதன் ரெஜினோல்ட் (வயது 47), பத்திரிநாதன் வின்சன் பெனடிக் (வயது 38), செல்வராசா அன்ரன் இருதயராசா (வயது 32), அழகநாதன் வின்சன் மரியதாஸ் (வயது 45), நாகப்பு மிக்கல்பிள்ளை (வயது 53) ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவிலுள்ள புலி உறுப்பினர்களிடம் நிதியினைப் பெற்று பல நாட்கலம் ஒன்றினை கொள்வனவு செய்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே  குறித்த மீனவர்களை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இவர்கள் கடலிலிருந்து கரைக்குத் திரும்பும் வரையிலும் கரையில் காத்திருந்து பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினர் இவர்களைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .