2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

யாழில் 10 ஆயிரம் ஹெக்டேயரில் நெற்செய்கை

Menaka Mookandi   / 2014 நவம்பர் 07 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

யாழ்.மாவட்டத்தில் இவ்வருட காலபோகத்தில்ள 10 ஆயிரத்து 800 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதி விவசாய பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம் வெள்ளிக்கிழமை (07) தெரிவித்தார்.

யாழ்மாவட்டத்தில் அண்மைய காலத்தில் நிலவும் மழை வீழ்ச்சியின் நிச்சயமற்ற தன்மை, உற்பத்தி தன்மை குறைவு, வரட்சி, மற்றும் விவசாயிகளின் ஆர்வமில்லா தன்மை காரணமாக இவ்வருடம் நெற்பயிற்செய்கை வீழ்ச்சி அடைந்துள்ளது.

யாழ்.மாவட்டத்தில் நெற்செய்கை மேற்கொள்பவர்களில் 80 வீதமானவர்கள் பகுதி நேர பணியாகவே விவசாய நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

கடந்த 2 வருட காலமாக நாட்டில் நிலவிய அதிக வரட்சி, கூலி வேலையாட்களுக்கு நிலவிய தட்டுப்பாடு போன்ற காரணங்களால் பகுதி வேலையாக நெற்பயிர் செய்கை செய்யும் விவசாயிகள் இம்முறை பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.

வழமையாக யாழ்ப்பாணத்தில் 12 ஆயிரத்து 301 ஹெக்டேயர் நிலப்பரப்பில் முன்னர் நெற்செய்கை செய்கை செய்யப்பட்டு வந்திருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .