2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

யாழில் 10 கொள்ளை சம்பவங்களில் 35 இலட்சம் ரூபா கொள்ளை: பிரதி பொலிஸ் மா அதிபர்

Kanagaraj   / 2013 ஜனவரி 25 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா
 
யாழ். மாவட்டத்தில் கடந்த வாரத்தில் 10 கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 35 இலட்சத்து 54 ஆயிரத்து 500 ருபா பணம் மற்றும் 15 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பெரிஸ்மா அதிபர் எரிக் பெரேரா இன்று தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பரிவிற்குட்பட்ட பிரசேதங்களில் வீடு உடைத்தல் மற்றும் கடை உடைத்து திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் பெறுமதியான மோட்டார் சைக்களில்கள் மற்றும் தங்க நகைகள் மற்றும் பெறுமதியான வீட்டு உபகரணங்கள் மற்றும் பெரும் தொகையான பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
 
இதில் சில திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சில திருட்டு சம்வங்கள் புரிந்த சந்தேக நபர்கள் சார்பில் தகவல்கள் கிடைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ளதால் கைதுசெய்ய முடியவில்லை, சந்தேக நபர்கள் தொடர்பாக புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தகவல் கிடைக்கப்பட்ட சந்தேக நபர்களை விரைவில் கைதுசெய்யவுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X