2025 ஜூலை 02, புதன்கிழமை

நாவற்குழியில் 10 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 16 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த் 


யாழ். நாவற்குழி பிரதேசத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியில்; குடியிருப்பவர்களில்  10 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.

குருநகர் மாடி வீட்டுத்தொகுதி பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்றது. இதன்போதே, இவர்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.

நாவற்குழி பிரதேசத்தில் தேசிய வீடமைப்பு  அதிகார சபைக்குச் சொந்தமான மேற்படி காணியில்  110 குடும்பங்கள் வசிக்கின்றன. இக்குடும்பங்கள் அனைத்துக்கும்  காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படுவதாக அழைக்கப்பட்டிருந்தபோதிலும்,  10 குடும்பங்களுக்கு மட்டும் உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .