2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

டிப்பர் மோதியதில் சிறுவன் பலி ; பெண் படுகாயம்

Janu   / 2025 செப்டெம்பர் 23 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை பொது வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பிரதான  வீதியைக் கடக்கும்போது  நான்கு வயது சிறுவனும், பெண் ஒருவரும் டிப்பர் லொறியுடன் மோதியதில், சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், குறித்த பெண் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுவனின் தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தாயைப் பார்பதற்காக தனது சித்தி மற்றும் பாட்டியுடன்  உஹன 22 காலனியில் இருந்து வைத்தியசாலைக்கு வந்து, வீடு திரும்புவதற்காக வைத்தியசாலையில் இருந்து வெளியேறி, பாதசாரிகள் கடவையில் பிரதான வீதியை கடக்கும்போது, ​​கல்முனை சந்தியில் இருந்து வந்த டிப்பர் லொறி மோதியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் நடந்த இடத்திலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை தலைமையக பொலிஸார் மேற்​கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .