2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

கொக்குவில் கொலைச் சந்தேகநபர் குறித்து தகவல் தருவோருக்கு ரூ.10 இலட்சம் சன்மானம்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 15 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா, கிரிசன்


யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் கொலை செய்யப்பட்ட தென்பகுதி இளைஞனின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தொடர்பில் தகவல் தருபவர்களுக்கு 10 லட்சம் ரூபா சன்மானமாக வழங்கப்படும் என்று பாதுகாப்பு தகவல் நிலையத்தை மேற்கோள் காட்டி  யாழ் மாவட்டத்தில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சரியான தகவல்கள் தருபவர்கள் 0774153803 என்ற தொலைபேசி இலக்கதுடன் தொட்புகொண்டு பணத்தினைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அந்த சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், இவ்வாறானதொரு தகவலை பொலிஸ் தரப்போ அல்லது இராணுவமோ விடுக்கவில்லை என்று பொலிஸ் மற்றும் இராணுவ தலைமையகங்கள் உறுதி செய்தன.  மேற்படி சுவரொட்டிகள் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு தரப்பினர் மேலும் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X