2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வடமாகாணத்தில் மீள்குடியேறியோருக்கு இந்திய அரசின் 10,000 சைக்கிள்கள்

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 01 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

வடமாகாணத்தில் மீளக்குடியேறிய மக்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 10,000 சைக்கிள்களில் யாழ். குடாநாட்டிற்கு 1,500 சைக்கிள்கள்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டத்தின் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

வடமாகாண ஆளுநரின் பணிப்புரைக்கமைய இந்த சைக்கிள்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் மீளக்குடியேறிய மக்களுக்கு  பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 1,500 சைக்கிள்களும் வவுனியா மாவட்டத்திற்கு 1,750 சைக்கிள்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அவ்வாறே மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் மீளக்குடியேறிய மக்களுக்கு சைக்கிள்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X