2025 மே 17, சனிக்கிழமை

கொழும்பிலிருந்து யாழ். நோக்கி சடலமொன்றுடன் சென்ற 11 பேரை காணவில்லை என புகார்

Super User   / 2011 டிசெம்பர் 28 , பி.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன், கவிசுகி)

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி எடுத்துவரப்பட்ட சடலத்தையும் காணவில்லை அதனுடன் கூட வந்த பதினொரு பேரையும் காணவில்லையென சுன்னாகம் பொலிஸிலும் புளியங்குளம் பொலிஸ் மற்றும் மனித உரிமைகள் ஆனைக்குழுவின் யாழ் அலுவலகத்திலும் முறையிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் மரணம் அடைந்து மூன்ற பிள்ளைகளி;ன் தந்தையின் சடலமும் அதனை எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணம் வந்தவர்களுமே கடந்த பத்து நாட்களாக காணாமல் போயுள்ளவர்களாகும்.

இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:

இந்தியாவில் உள்ள வைத்தியசாலையொன்றில்  கடந்த 18 ம் ஆம் திகதி க.தனஞ்செயன் வயது 38 என்பவர் மரணம் அடைந்துள்ளார்.
இவருடைய சடலம் 19ம் திகதி நன்பகல் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு விமானம் மூலம் எடுத்து வரப்பட்டு அங்கிருந்து தனியார் வாகனத்தின் மூலம் யாழ்ப்பாணம் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டன.

இதனைத் தொடர்ந்து ஏழாலை மேற்கில் உள்ள ஒன்றுவிட்ட சகோதரியின் வீட்டில் மரணக் கிரியைகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் 20 ஆம் திகதி காலை அதிகாலை 1.00 மணியளவில் தாம் பிரேதத்துடன் ஓமந்தைக்கு வந்துவிட்டோம் என்று இறந்தவரின் சகோதரியான மருத்துவர்  ஏழாலையில் உள்ள உறவினர்களுக்கு செல்லிடத் தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார்.

பின்னர், பனிக்கம் களத்தில் சடலம் கொண்டுவந்த வாகனத்தின் டயர்கள் காற்று போன நிலையில் நிற்பதாகவும் டயர்களை ஒட்டிக்கொண்டு புறப்பட்டு வருவதாகவும் அவர்; பகல் 11.00 மணியளவில் தெரிவித்துள்ளார்.

இரவு 5.00 மணியளவில் குறிப்பி;ட்ட சகோதரி வாகனத்தின் ரயர்கள் மாற்றி விட்டோம் வாகனம் ஸ்ராட் அகவில்லை அதனைப் பார்த்தக்கொண்டு வருகின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

இரவு முழுவதும் அவர்களிடமிருந்து உறவினர்களுக்கு தொடர்புகள் எவையும் கிடைக்கவில்லை.  21 ஆம் திகதி காலையில் தொடர்புகொண்ட அவர்கள், தம்மை யாரோ சடலத்துடன் கடத்திச்சென்று காட்டில் வைத்திருப்பதாக தெரிவித்தனர். அதன்பின் கையடக்கத் தொலைபேசியின் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஏழாலையில் உள்ள உறவினர்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்தபோது அவர்களை புளியங்குளம் பொலிஸ் நிலையம் சென்ற முறையிடும்படி  சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆனைக்குழுவின்மூலம் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் குறிப்பிட்ட விடயம் தொடர்பாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்விடயத்தை யாழ்ப்பாணம் பொலிஸ் உதவி அத்தியட்சகரின் கவனத்திற்கு கிராம அலுவலாகள் கொண்டுவந்த நிலையில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் விடுத்த பணிப்புரையைத் தொடர்ந்து குறிப்பி;ட்ட விடயம் சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் உரிய  நடவடிக்கைகள் மேற்கொள்வதாக உரியவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட வாகனத்தில் இறந்தவரின் மனைவியும் பத்து வயதுக்கு உட்பட்ட பிள்ளைளும் திருகோணாமலை செயலகத்தில் அமைந்துள்ள நிக்கொட் நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலரான நிரஞ்சன் மற்றும் மனைவி மூன்று  பிள்ளைகள் (பத்து வயதுக்கு உட்பட்டவர்கள்)  சகோதரி மற்றும் ஒரு உறவினர் ஆகியோரே காணாமல் போயுள்ளவர்களாகும்.

இச்சம்பவம் நடந்து சுமார் பத்து நாட்கள் கடந்த நிலையிலும் கூட குறிப்பி;ட்ட நபர்களுக்கோ அவர்களால் கொண்டுவரப்பட்ட சடலத்திற்கோ வாகனத்திற்கோ சாரதிக்கோ என்ன நடந்தது என்று தெரியாத நிலையில் உறவினர்கள் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .