Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஏப்ரல் 19 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு 1,130.55 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் இன்று தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் பல புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தவதற்கு அனுமதி கிடைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ். சேயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, விஜயகலா மகேஸ்வரன் ஆகியோருடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
பாதுகாப்பு வலயங்களில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட வடமராட்சி, தென்மராட்சி, நல்லூர் பிரதேசங்களின் வீதிகள், சந்தைக் கட்டிடங்கள், பாடசாலைகள், நூலகம் போன்றன கீழ் கட்டுமான அபிவிருத்திக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இங்கு கலந்துகொண்டு பேசிய தழிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் சமர்ப்பிக்கப்பட்ட சில அபிருத்தி பணிகள் தொடர்பாக அதிருப்தியைன் வளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago