2025 ஜூலை 07, திங்கட்கிழமை

யாழில் 12 பேருக்கு டெங்கு நோய்த்தாக்கம்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 02 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

யாழ். மாவட்டத்தில் ஒரு வயதுக் குழந்தை உட்பட 12 பேர் கடந்த வாரத்தில் டெங்கு நோய்த் தாக்கத்துக்குள்ளாகியுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாவகச்சேரி, தெல்லிப்பளை, நல்லூர், உடுவில், சங்கானை, வேலனை, யாழ்ப்பாணம் ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .