Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2011 நவம்பர் 02 , மு.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
1998ஆம் ஆண்டு மாங்குளம் மூன்று முறிப்புப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து 'ஜெயசிக்குறு' படை நடவடிக்கைக்கு எதிராகப் போரிட்டாரென்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இளைஞரொருவர் 13 வருடங்களின் பின்னர் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டார்
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த இளைஞன் 13 வருடங்களின் பின்னர் யாழ். மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
கிளிநொச்சி திருநகர் தெற்கை சேர்ந்த நவரத்தினம் பாலசிறி என்ற இளைஞரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவராவார்.
இவர் காலி மற்றும் யாழ். சிறைச்சாலைகளில் விளக்கமறியலிலும் இறுதியாக பூசாவிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இவருக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு விசாரணை நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.
மேற்குறிப்பிட்ட நபரினால் வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் யாழ். மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரணை செய்த யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி சு.பரமராஜா இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
3 hours ago
3 hours ago