2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

அடகு வைக்கப்பட்ட 13 வாகனங்கள் மீட்பு; ஒருவர் கைது

Menaka Mookandi   / 2013 ஜூலை 15 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

வாடகைக்கு அமர்த்தப்படட்டு அடகு வைக்கப்பட்ட 13 வாகனங்கள் இன்று திங்கட்கிழமை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

கடவத்தையை சேர்ந்த வாகன உரிமையாளர் ஒருவர் வாடகைக்கு வழங்கப்பட்ட வாகனங்கள் அடகு வைக்கப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட புலனாய்வு நடவடிக்கையில் 13 வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் சந்தேகநபர் ஒருவர் யாழ் நகரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X