2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சுயதொழில் முயற்சியாளர்கள் 15 பேருக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 ஏப்ரல் 03 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வறுமையற்ற இலங்கையை உருவாக்க வேண்டுமென்ற வாழ்வின் எழுச்சி வேலைத்திட்டத்தின் கீழ் நல்லூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 15 குடும்பங்களுக்கு ரூபாய் 37,000 பெறுமதியான சுயதொழில் உபகரணங்கள் வியாழக்கிழமை (3) வழங்கப்பட்டன.

இதன்படி 12 குடும்பப் பெண்களுக்கு சுயதொழில் முயற்சிக்காக தலா 22,000 ரூபா பெறுமதியான தையல் இந்திரங்களும், 3
கடற்றொழிலாளர்களுக்கு தலா 15,000 ரூபா பெறுமதியான கடற்றொழில் உபகரணங்களும் வழங்கப்பட்டன. 

நல்லூர் பிரதேச செயலர் பா.செந்தில்நந்தனன் தலைமையில் நல்லூர் பிரதேச செயலகத்தில்   வியாழக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்ரின் அலென்ரின் கலந்துகொண்டு உபகரணங்களை வழங்கினார். 

இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .