2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஊர்காவற்றுறையில் 150 பேருக்கு இந்திய வீட்டுத்திட்டம்

Menaka Mookandi   / 2014 ஜூன் 25 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

ஊர்காவற்றுறைப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 150 குடும்பங்களுக்கு இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறைப் பிரதேச செயலர் திருமதி அன்ரன் யோகநாயகம் இன்று புதன்கிழமை (25) தெரிவித்தார்.

பெண்களைத் குடும்பத் தலைவிகளாகக் கொண்ட குடும்பங்கள், மாற்றுவலுவுள்ளோரினைக் கொண்ட குடும்பங்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்ட குடும்பங்கள் மற்றும் கூடிய அங்கத்தவர்களைக் கொண்ட நலிவுற்ற குடும்பங்கள் ஆகிய குடும்பங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு பயனாளிகள் தெரிவு 2013ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. 

இந்தப் பயனாளிகள் தெரிவானது பிரதேச செயலகத்திற்குட்பட்ட அனலைதீவு வடக்கு, அனலைதீவு மேற்கு, பருத்தியடைப்பு, கரந்தன், நாரந்தனை வடக்கு, நாரந்தனை மேற்கு, நெலிஞ்சி முனை, புளியங்கூடல் ஆகிய 8 கிராம அலுவலர் பிரிவுகளிலும் இடம்பெற்றது.

மேற்படி வீட்டு பணிகள் இவ்வருட ஆரம்பத்திலிருந்து ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .