2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மே 18ஆம் திகதியை துக்க தினமாக அனுஷ்டிக்க வேண்டும்: சிவாஜிலிங்கம்

Super User   / 2011 மே 14 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வன்னி போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மே 18ஆம் திகதி புதன்கிழமையை துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

குடையடைப்பு, பொது வேலை நிறுத்தம் என்னிறில்லாமல் அமைதியாக கோவில்களிலும் தேவாலயங்களிலும் வீடுகளிலும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறு அவர் குறிப்பிட்டார்.

அன்றைய தினம் ஆடம்பர கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பதுடன் ஓராண்டு நினைவு தினம் அனுஷ்டித்தால் போதும் என்று எண்ணாமல் ஒவ்வொரு ஆண்டும் முள்ளிவாய்க்கல் படுகொலைக்கு மே 18ஆம் திகதி நினைவு அஞ்சலி செலுத்த வேண்டும் என சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X