Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 டிசெம்பர் 05 , பி.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி,கிரிசன்)
இந்தியாவிலிருந்து இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்பிற்கு போதைப்பொருள் கடத்தியதாக தெரிவிக்கப்படும் எட்டு மீனவர்களை எதிர்வரும் டிசம்பர் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் எஸ்.கஜநிதிபால இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார்
இவர்களில் இலங்கை மீனவர்கள் மூவரும் இந்திய மீனவர்கள் ஐந்து மீனவர்களும் அடங்குகின்றனர்.
இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பில் கொழும்பு இராசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கையை நீதிமன்றில் சமர்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, இந்திய மீனவர்களின் நலன்களை யாழ். சிறையில் கவனித்துக் கொள்வது தொடர்பாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் சட்டத்தரணி மூலம் விண்ணப்ப மனு ஒன்றையும் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளது
இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் சார்பாக சட்டத்தரணிகளான முடியப்பு றெமிடியஸ் மற்றும் என்.கிருஷ்னவேணி ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகினர்.
neethan Tuesday, 06 December 2011 04:51 AM
போதை பொருள் கடத்தியமை நிருபணமானால் தண்டனை கடுமையாக இருக்குமே? தண்டனையில் இந்தியர்களுக்கு விதிவிலக்கு இருக்குமா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago