2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

யாழ்.நூலகம், வைத்தியசாலைக்கு ரூ 2.4 மில்லியன் உதவி

Kogilavani   / 2014 மார்ச் 24 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன், சுமித்தி தங்கராசா


மலேசியா, இலங்கை கூட்டு நிறுவனங்களின் சம்மேளனத்தினால் யாழ்.நூலகம் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை ஆகியவற்றிற்கு 1 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலை மற்றும் 1.4 மில்லியன் பெறுமதியான பொருட்கள் ஞாயிற்றக்கிழமை(23) வழங்கப்பட்டன.

யாழ். பொதுநூலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், உதவிகளினை மலேசிய இலங்கை கூட்டு நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் குலசேகரம் சபாரத்தினத்தினம் வழங்கி வைத்தார்.

யாழ்.பொதுநூலகத்திற்கு 1 மில்லியன் ரூபா காசோலை, புத்தகங்கள் மற்றும் 20 கணினிகள் என்பவற்றை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி பெற்று யாழ்.பொது நூலகத்தினருக்கு வழங்கினார்.

மேலும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கான மருத்துவப் பொருட்களை யாழ்.போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு தலைவர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை பெற்றுக்கொண்டார்.

பொதுநூலகத்திற்கு வழங்கப்பட்ட காசோலை தவிர்ந்த, புத்தகங்கள், கணினிள் மற்றும் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட மருத்துவப் பொருட்கள் ஆகியவற்றின் பெறுமதி 1.4 மில்லியன் ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .