2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யாழ். குடாநாட்டில் கடந்த வருடம் 251 விடலைப் பருவ கர்ப்பங்கள் : அரச அதிபர்

Kogilavani   / 2011 ஏப்ரல் 02 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)
யாழ். குடாநாட்டில் கடந்த 2010 ஆம் ஆண்டு மட்டும் 251 சிறுவர்கள் விடலைப் பருவ (பதின்மர் பருவ) கர்ப்பம் தரித்தவர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் இன்று சனிக்கிழமை  தெரிவித்துள்ளார்.

இதேவேளை யாழ். மாவட்டத்தில் இருந்த 194,451 மொத்த சிறுவர்களில் தாய், தந்தையை இழந்த சிறுவர்கள் 437 பேரும்,  தந்தையை மட்டும் இழந்த சிறுவர்கள் 6,321 பேரும்,  பெற்றோரால் கைவிடப்பட்ட சிறுவர்கள் 489 பேரும் உள்ளனர்.

சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட 163 பேரும், பயங்கரவாத நடவடிக்கைகளினால் பெற்றோரை இழந்த சிறுவர்கள் 990 பேரும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட 272 சிறார்களும்,  மாற்று வலுவுடைய சிறுவர்கள் 417 பேரும் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

349 சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், 349 சிறுவர்கள் பாடசாலைகளிலிருந்து விலகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த வருடம் ஜனவரி,  பெப்ரவரி மாதத்தில் மட்டும் 40 சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்கு உட்பட்டுள்ளதுடன், விடலைப் பருவ கர்ப்பம் தரித்தவர்களாக 109 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் மேலும் தெரிவித்துள்ளார்
 


  Comments - 0

  • Tamililan Sunday, 03 April 2011 01:21 PM

    என்ன புள்ளி விபரத்தில கப்டன மிஞ்சிடுவாங்க போல இருக்கு. :-)

    Reply : 0       0

    xlntgson Saturday, 09 April 2011 09:07 PM

    தற்கொலை ஓர் இலட்சத்துக்கு ஒன்று இருக்கலாம் என்கிறது ஒரு கணக்கு.
    இதற்கு எப்படியோ?
    ஆதிவாசிகள் வேடர்கள் மலைவாசிகள் பூர்வீகக் குடிகள் இதற்கு விதி விலக்கு உடையவர்களா?
    வயதுக்கு வந்த பெண்களை திருமணம் செய்து கொடுக்காமல் என்ன செய்வார்களாம்?
    படிப்பு நின்றுவிட்டாலும் வீட்டில் சும்மா இருக்க வேண்டுமா?
    படித்தவர்களுக்கே வேலை இல்லை என்றால் படிப்பு நின்றவருக்கு வேலை?
    மகப்பேறு மருத்துவ முறைகள் எளிமையாகி விட்டதாக கூறப்படுகிறதே அதில் உண்மை இல்லையா?
    வயது போய்தான் கல்யாணம் என்றால் குடும்பக் கட்டுப்பாடு திட்டம் ஏன்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X