2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வி.தர்மலிங்கத்தின் 27ஆவது நினைவஞ்சலிக் கூட்டம்

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 03 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)


தமிழீழ விடுதலை இயக்கத்தினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக்கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மூத்த உறுப்பினருமான அமரர் வி.தர்மலிங்கத்தின் 27ஆவது நினைவஞ்சலிக் கூட்டம் அமரர் தர்மலிங்கம் நினைவுக்குழுத் தலைவர் எஸ்.கௌரிகாந்தன் தலைமையில் உடுவில் பிரதேச சபையின் பொதுநூலக மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அன்னாரின் உருவப்படத்திற்கு திருமதி தர்மலிங்கம், மகன் சித்தார்த்தன், முன்னாள் வன்னி புளொட் நாடாளுமன்ற உறுப்பினர் பாலச்சந்திரன், வலி. தெற்கு உடுவில் பிரதேசசபைத் தலைவர் தி.பிரகாஷ் உள்ளிட்ட  பலர்  நினைவுச்சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலிக் கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற    உறுப்பினர் பாலச்சந்திரன்,  பிரதேசசபைத் தலைவர் தி.பிரகாஷ், புளொட் அமைப்பின் தலைவரும் மகனுமான சித்தார்த்தன் உட்பட பலர் உரையாற்றினார்கள்.    



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X