2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தெல்லிப்பளையில் திருட்டு மின்சாரம் பெற்ற 28 பேர் கைது

Super User   / 2010 நவம்பர் 02 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவம்)

தெல்லிப்பளை பொலிஸ் பகுதியில் இடம்பெற்ற திடீர் சோதனை நடவடிக்கையின் போது திருட்டு மின்சாரம் பெற்ற 28 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து வந்த விசேட குழுவினர் தெல்லிப்பளை பொலிஸாருடன் இணைந்து அளவெட்டி, தெல்லிப்பளை, கும்பளை, மல்லாகம் ஆகிய பகுதிகளில் இரவு நேரம் திங்கட்கிழமை சோதனை நடவடிக்கையை மேற்கொண்டபோது இவர்கள் மாட்டிக்கொண்டனர்.

மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் குறிப்பிட்ட நபர்கள் பொலிஸார் ஆஜர் செய்தனர்.

விசாரணைகளை மேற்கொண்ட நீதிவான் இவர்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபா தண்டனையாக விதித்ததுடன் மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்காக குறிப்பிட்டவர்களின் பாவனைக்கமைவாக ஆறாயிரம் ரூபாவில் இருந்து எண்ணாயிரம் ரூபாவரை கட்டும் படியும் உத்தரவிடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X