Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஜூலை 03 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாவட்டத்தில் வடமராட்சி கிழக்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை 863 குடும்பங்களுக்கு மீள்குடியேற அனுமதிக்கப்பட்டன.
போக்கறுப்பு , வெற்றிலைக்கேனி, மருதங்கேணி ஆகிய கிராமங்களிலேயே இன்று மீள்குடியேற்றம் இடம்பெற்றது. இது தொடர்பாக போக்கறுப்பில் இன்று நடைபெற்ற வைபவத்தில் பஷில் ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி, பாதுகாப்புப் படைகளின் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க. மருதந்கேணி பிரதேச செயலர், மற்றும் படை அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
போக்கறுப்பு கிராமத்தில் இராணுவத்தின் நிதியில் அமைக்கப்பட்ட 10 வீடுகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Nesan Sunday, 03 July 2011 09:38 PM
நல்லது. தேர்தலும் வருகிறது
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
6 hours ago