Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2012 மார்ச் 15 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணத்தில் இந்த வருடம் மார்ச் மாதம் 15ஆம் திகதிவரையான காலப்பகுதியில் சிறுமிகள் மீதான 32 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், பெண்கள் மீதான 38 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சி.சிவரூபன் தெரிவித்தார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
கடந்த 2010ஆம் ஆண்டு பெண்கள் மீதான பாலியல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 102ஆக இருந்ததெனவும் 2011ஆம் ஆண்டு இது 182ஆக அதிகரித்திருந்ததெனவும் யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்தில் சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர் இல்லங்களிலேயே இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுவதாக பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் சிறுவர்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சி.சிவரூபன் தெரிவித்தார்.
Kanavaan Friday, 16 March 2012 01:31 AM
விலைவாசியும், பாலியல் வன்முறையும் இலங்கையில் ஒன்றை ஒன்று முந்திக்கொண்டே போகிறது போலும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
4 hours ago
4 hours ago
6 hours ago