Menaka Mookandi / 2011 ஜூலை 04 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
யாழ். குடாநாட்டில் இன்னமும் 40 வீதமான நிலப்பரப்பில் கண்ணிவெடி அகற்றப்பட வேண்டும். தற்போது அந்த நிலப்பரப்பிலும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக யாழ். மாவட்ட கண்ணிவெடி செயற்பாட்டு அலுவலகப் பொறுப்பதிகாரி வ.முருகதாஸ் இன்று திங்கட்கிழமை விடுத்துள்ளள ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
"'யாழ். மாவட்டத்தில் தற்போது 3 நிறுவனங்கள் கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன. ஹலோட்ரஸ், டானிஸ் கண்ணிவெடி அகற்றும் பிரிவு, மனித நேயக் கண்ணிவெடி அகற்றும் இராணுவத்தின் முதலாம் பொறியியல் பிரிவு ஆகியனவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.
இந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் திகதி பெறப்பட்ட இறுதி களநிலை அறிக்கையின் படி இன்னும் 22 சதுர கிலோமீற்றர் பரப்பில் கண்ணிவெடி அகற்றல் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன் 3 சதுர கிலோமீற்றர் பரப்பில் தற்போது வேலை இடம்பெற்று வருகின்றது.
யாழ். குடாநாட்டில் கண்ணிவெடி அபாயமுள்ள பிரதேசமாக இனங்காணப்பட்ட 530 பிரதேசங்களில் 445 பிரதேசங்களில் அதாவது 38 சதுர கிலோமீற்றரில் முற்றாகக் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துள்ளன. எஞ்சிய இடங்களில் தற்போது கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் அவை மிக விரைவிலேயே பூர்த்தியடையலாம்."
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago