2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

'நல்லூர் பிரதேச சபையினால் 44 சனசமூக நிலையங்கள் புனரமைக்கப்படவுள்ளன'

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 21 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                          (ஜெ.டானியல்)
நல்லூர் பிரதேச சபையினால் 44 சனசமூக நிலையங்களை புனரமைப்பு செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபை தலைவர் பரமலிங்கம் வசந்தகுமார் இன்று செவ்வாய்கிழமை தெரிவித்தார்

நல்லூர் பிரதேச சபையின் அபிவிருத்தி பணிகள் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.கோண்டாவில் பகுதியில் போத்தல் தண்ணீர் உற்பத்தித் தொழிற்சாலை ஒன்று அமைக்கப்பட்டு அதில் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளனது.

கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் மாணவர்களின் கல்வியை அபிவிருத்தி செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு பாலர் பாடசாலைகளில் சத்துணவு வழங்கும் செயற்திட்டத்தையும் ஆரப்பிக்கவுள்ளோம்
யாழ்.நல்லூர் பிரதேச சபையினுடாக இது வரை 54 வீதிகளின்; புனரமைப்புக்காக 18 மில்லியன் ரூபாவை செலவு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X