2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சண்டிலிப்பாயில் 494 நாய்களுக்கு கருத்தடை

Menaka Mookandi   / 2014 ஜூலை 24 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

யாழ்., சண்டிலிப்பாய் (வலி.தென்மேற்குப் பிரதேச சபைப் பிரிவு) சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் வளர்ப்பு நாய்கள், தெரு நாய்கள் என 494 பெண் நாய்களுக்கு கருத்தடை சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக சண்டிலிப்பாய் சுகாதார வைத்தியதிகாரி இன்று வியாழக்கிழமை (24) தெரிவித்தார்.

கொழும்பில் இருந்து வரவழைக்கப்பட்ட மிருக வைத்திய குழுவினர் கடந்த ஒரு வார காலமாக பெண் நாய்களுக்கான கருத்தடைச் சத்திர சிகிச்சையினை மேற்கொண்டிருந்தனர்.

சண்டிலிப்பாய் பிரதேசத்தில் கட்டாக்காலி நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதினால் வீதியால் செல்வோருக்கு போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டதுடன், தெருநாய்க் கடிக்கு இலக்காவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கின்றது.

இதனைக் கருத்திற்கொண்டே மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்தியதிகாரி மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .