2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

பண்ணை கடலுக்குள் பஸ் பாய்ந்து விபத்து: 5 பேர் படுகாயம்

Kanagaraj   / 2013 பெப்ரவரி 12 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


பண்ணை கடலுக்குள் பஸ்ஸொன்று பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பத்தில் படுகாயமடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து ஊறுகாவற்றுறைக்கு சென்றுக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பஸ்ஸின் சாரதியான சுதாகரன்,நடத்துனர் சுப்பிரமணியம் பரமநாதன் (வயது 50) நாவலர் வீதி பகுதியைச் சேர்ந்த கோபாலு கணேசலிங்கம் (வயது 40) தெஹியத்த கண்டியைச் சோந்த பிரியாணி தம்மிகா (27) வேலணை சரவணை பகுதியைச் சேர்ந்த பரமலிங்கம் துவாரகா (வயளது 26) கரம்பன் ஊர்காவற்துறையைச் சேர்ந்த பிரேமானன் சந்தன (வயது 31) ஆகியோரே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X