2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வீரசிங்கத்தின் 50ஆவது நினைவுதினம்

George   / 2014 டிசெம்பர் 06 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


யாழ். மாவட்ட கூட்டுறவு சபையின்; ஏற்பாட்டில், வடமாகாணத்தின் கூட்டுறவு பெரியார் என அழைக்கப்படும் அமரர் வீரசிங்கத்தின் 50ஆவது நினைவு தினம், வீரசிங்;கம் மண்டபத்தில் யாழ். மாவட்ட கூட்டுறவு சபையின் தலைவர் தி.சுந்தரலிங்கம் தலைமையில் வெள்ளிக்கிழமை(05) அனுஷ்டிக்கப்பட்டது.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இலங்கை தேசிய கூட்டுறவு சபையின் தலைவர் லலித் ஏ பீரிஸ், யாழ். மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் சி.கே.அருந்தவநாதன் ஆகியோர் வீரசிங்கத்தின் திருவுருவ படத்துக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

'மாறி வரும் சமூக சூழ்நிலையில் அதிக நெருக்கடிக்குட்படுபவர்கள் வாலிபர்களா அல்லது வயோதிபர்களா' என்ற தலைப்பிலான பட்டிமன்றம் இடம்பெற்றதுடன், இதற்கு சொல்லின் செல்வர் இரா.செல்வவடிவேல் நடுவராக இருந்தார்.

வீரசிங்கம் ஞாபகார்த்தமாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் சிறப்பாக செயற்பட்ட கூட்டுறவு சங்கங்களும் கௌரவிக்கப்பட்டன. இதன்போது முதலமைச்சர், வீரசிங்கத்தின் நினைவு பேருரையை நிகழ்த்தினார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .