2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இந்திய மீனவர்கள் 60 பேர் விடுதலை

Kanagaraj   / 2014 ஜனவரி 18 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, எஸ்.ஜெகநாதன்

இந்திய மீனவர்கள் 60 பேரும் அவர்களது படகுகளும் சட்டமாஅதிபரின் அறிவுறுத்தலுக்கமைய மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவானும் மேலதிக மாவட்ட நீதவானுயுமான எச்.எம்.மொஹமெட் பஷிலினால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

டிசம்பர் 11 ஆம் திகதியன்று அனலைதீவிற்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட இந்திய புதுக்கோட்டை ஜனதாப் பட்டிணம் மற்றும் கோட்டைப்பட்டிணம் ஆகிய பகுதிகளிலிருந்து 8 படகுகளில் வந்த 30 இந்திய மீனவர்களும், நவம்பர் மாதம் 5 ஆம் திகதி காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட இந்திய புதுக்கோட்டை மற்றும் இராமேஸ்வரம் பகுதியிலிருந்து 7 படகுகளில் வந்த 30 மீனவர்களுமே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களைப் பொறுப்பேற்ற இலங்கை கடற்படையினர் இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்தியக் கடற்படையினரிடம் கையளிக்கவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .