2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

யாழில் 6,250 மரக்கன்றுகள் பகிர்ந்தளிப்பு

George   / 2014 நவம்பர் 15 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

வனவளத்திணைக்களம், தென்னைப்பயிர்ச்சபை, மரமுந்திரிகை கூட்டுதாபனம் மற்றும் சுற்றாடல் அமைச்சின் உதவியுடன் வனவளத்தை அதிகரிக்கக்கூடிய 6,250 மரக்கன்றுகள் 15 பிரதேச செயலகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக, யாழ். மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஆர்.மோகனேஸ்வரன், சனிக்கிழமை (15) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

2020ஆம் ஆண்டு இலங்கையின் காடு அடர்த்தியை 35 வீதமாக அதிகரிப்பதை இலக்காக கொண்டு 2010 ஆம் ஆண்டு இத் திட்டமானது ஆரம்பிக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் இடம்பெற்று வருகின்றது.

நிலக்கீழ் நீர் மட்டத்தை அதிகரிக்கச்செய்தல், கமத்தொழிலுக்கு தேவையான நீரைப்பாதுகாத்தல், மண்ணரிப்பை தடுத்தல், மரத்தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளல் மற்றும் மண்ணின் செழிப்பை அதிகரித்தல் எனும் நோக்கத்தின் அடிப்படையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் வாழ்வின் எழிச்சி திட்டத்தின் கீழ் பனைமரக்கன்றுகள் ஒவ்வொரு பிரதேச செயலகங்களுக்கும்; விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாளையும் அவரது பதவி ஏற்பு நிகழ்வினையும் முன்னிட்டு வருடா வருடம் நடாத்தப்படும் 'தேசத்தின் நிழல்' மரநடுகை நிகழ்வு சனிக்கிழமை (15) தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கீரிமலைப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .