Suganthini Ratnam / 2011 ஜூலை 23 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.சுகந்தினி,கவிசுகி)
யாழ். மாவட்டத்தில் சுமார் 46 வீதமான வாக்குப்பதிவும் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச சபையிலும் கிளிநொச்சி மாவட்டத்திலும் சுமார் 65 வீதமான வாக்குப்பதிவுகளும் இன்று சனிக்கிழமை பிற்பகல் 4 மணி வரை இடம்பெற்றுள்ளதாக யாழ்., முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் பிற்பகல் 4 மணி வரை சுமார் 65 வீதமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி ரூபவதி கேதீஸ்வரன் குறிப்பிட்டார்.
பச்சிலைப்பள்ளி பிரதேச சபை பிரிவில் 45 வீதமான வாக்குப்பதிவும் கரைச்சி பிரதேச சபையில் 65 வீதமான வாக்குப்பதிவும் பூநகரி பிரதேச சபையில் வாக்குப்பதிவும் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேசசபைக்கான உள்ளூராட்சிமன்றத் தேர்தலும் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை, கரைச்சி பிரதேச சபை, பூநகரி பிரதேச சபை ஆகியவற்றுக்கான உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களும் எந்தவித அசம்பாவிதங்களுமின்றி சுமூகமான முறையில் நடைபெற்றதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் கூறினர்.
தற்போது தபால்மூலமான வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்றையதினம் வாக்களிக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்து வரப்பட்டவுடன் வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் நடைபெறுமெனவும் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
56 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago