2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பருத்தித்துறை நீதிமன்றக் கட்டடங்கள் 66.3 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு

Super User   / 2010 ஒக்டோபர் 12 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கர்ணன்)

பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்றக் கட்டடங்கள் 66.3 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

இங்குள்ள சிறைச்சாலைக் கட்டடம், சட்ட நூலகம் உள்ளிட்ட அனைத்துக் கட்டடங்களும் இவ்வாறு புனரமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

போர்க் காலச் சூழலின் போது இக்கட்டடம் சேதமடைந்த நிலையில் கரவெட்டி வதிரியில் தனியார் கட்டடம் ஒன்றில் நீதிமன்றம் செயற்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பருத்தித்துறை நீதிமன்றத்தைச் சொந்த இடத்தில் இயங்க வைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு பருத்தித்துறை சட்டத்தரணிகள் சங்கம் நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இக்கோரிக்கையைப் பரிசீலித்த நீதிச்சேவை ஆணைக்குழு, குறித்த நீதிமன்றக் கட்டடத்தைப் புனரமைப்புச் செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்த வகையில் இக்கட்டடப் புனரமைப்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. எதிர்வரும் பெப்ரவரி மாதத்துடன் புனரமைப்புப் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பருத்தித்துறை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சபா ரவீந்திரன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X