2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அத்துமீறி மீன்பிடித்த 74 மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை

George   / 2014 ஓகஸ்ட் 19 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 74 மீனவர்கள் இவ்வருடத்தின் ஜனவரி மாதம் முதல் இது வரையான காலப்பகுதி வரை கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக 52 வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை பிரதிப்பணிப்பாளர் எஸ்.சுதாகரன் செவ்வாய்க்கிழமை (19) தெரிவித்தார்.

வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட மேற்படி மீனவர்களுக்கு எதிராக 2 இலட்சத்து 55 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளதுடன் மீனவர்களின் 9 படகுகளும் 9 வெளியிணைப்பு இயந்திரமும் அரசுடமையாக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அதேவேளை, அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 2013 ஆம் ஆண்டு 108 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு 4 இலட்சத்து 27 ஆயிரத்து 500 ரூபா தண்டம், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டதுடன், அவர்களின் 10 படகுகளும் வெளியிணைப்பு இயந்திரங்களும் அரசுடமையாக்கப்பட்டுள்ளமையை அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் பிற மாவட்டங்களிலிருந்து வருகை தந்து அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு, தண்டங்கள் விதிக்கப்பட்டவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .