2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வடமாகாண சாலைகளுக்கு 75 பேருந்துகள் வழங்க நடவடிக்கை

Kogilavani   / 2014 ஒக்டோபர் 06 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

'எதிர்வரும் 13 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண சாலைகளுக்கு 75 பேருந்துகள் வழங்கப்படவுள்ளன.

வடக்கிற்கான ரயில் சேவையை ஆரம்பித்து வைப்பதன் மூலம் யாழ்ப்பாணத்துக்கு  செல்லும் ஜனாதிபதி, கொடிகாமம், நாவற்குழி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புகையிரத நிலையங்களையும் திறந்து வைக்கவுள்ளார்.

அதனை தொடர்ந்து, யாழிலுள்ள அரச திணைக்களங்களில் கடமையாற்றும் அரச ஊழியர்களுக்கான 2000 மோட்டார் சைக்கிள்களை வழங்கி வைப்பதுடன், பேருந்துகளை, சாலை முகாமையாளர்களிடம் கையளிக்கவுள்ளார்.

அதனை தொடர்ந்து யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் 5 மாவட்டங்களையும் ஒன்றிணைத்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தவுள்ளார்.

இதேவேளை, வடமாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கான கொடுப்பனவு, சொத்தழிவு நட்டஈட்டு கொடுப்பனவு, சேதமடைந்த வணக்கஸ்தலங்களுக்கான கொடுப்பனவு ஆகியவற்றை பயளாளிகளுக்கு வழங்கவுள்ளார்.

தொடர்ந்து, நெல்லியடி மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட மகிந்தோதைய ஆய்வுகூடத்தை திறந்து வைக்கவுள்ளார்.

14 ஆம் திகதி நயினாதீவு நாகபூசணி ஆலயம் மற்றும் நாகவிகாரைக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.

அதனை தொடர்ந்து, நெடுந்தீவுக்குச் சென்று புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரதேச சபை கட்டடத்தை திறந்து வைப்பதோடு, ஊர்காவற்றுறை, வேலணை பிதேச செயலர் பிரிவுகளில் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .