2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வடமாகாணத்தில் 96 சதவீத தபால்மூல வாக்களிப்பு

Suganthini Ratnam   / 2011 ஜூலை 22 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வடமாகாணத்தில் 96 சதவீதம்  உள்ளூராட்சிமன்றத்  தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக யாழ். மற்றும் வன்னித் தேர்தல் மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

வடமாகாணத்தில் 20 உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தல் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதற்கான தபால்மூல வாக்களிப்பு இந்த மாதம் 12ஆம் திகதி ஆரம்பமானது. யாழ். மாவட்டத்தில் 4 ஆயிரத்து 902 பேரும்  கிளிநொச்சி மாவட்டத்தில் 264 பேரும் முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசசபைக்கு 30 பேரும் தபால்மூலம் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

இந்த நிலையில், யாழ்.மாவட்டத்தில் 4 ஆயிரத்து 540 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 251 பேரும் துணுக்காய் பிரதேச சபைக்கு சகலரும் தமது தபால் மூலவாக்களிப்பை அளித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X