2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

10 ஆயிரம் பனை விதைகள் திட்டம் ஆரம்பம்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 22 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ற.றஜீவன்

யாழ்., பருத்தித்துறை நகரசபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் 10 ஆயிரம் பனை விதைகள் நாட்டும் திட்டம் இன்று புதன்கிழமை (22) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் நிதியுதவியில் முன்னெடுக்கும் இந்த பனை விதைகள் நாட்டும் திட்டம் இன்று புதன்கிழமை (22) நகரசபை சிறுவர் பூங்காவில் ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ந்து வரும் நாட்களில் படிப்படியாக வல்லைவெளி வரையில் இந்த பனம் விதைகள் நாட்டும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

யாழ். மாவட்டத்தில் அழிவடைந்த பனை மரங்களின் எண்ணிக்கையை ஈடு செய்வதற்கும், பனந் தோப்புக்களை உருவாக்கும் நோக்குடனும் இந்த பனை விதைகள் நாட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .