2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

’118 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன’

Niroshini   / 2021 பெப்ரவரி 11 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

வடக்கு மாகாண மக்களுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக, 118 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என, வடக்கு மாகாணச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில், இன்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், வடக்கு மாகாணத்தில், சுகாதார உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன எனவும் அவர்களில், 85 சதவீமான உத்தியோகத்தர்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இதைதொடர்ந்து, வடக்கில் உள்ள மக்களுக்கு தடுப்பூசிகள் வழங்குவதற்கு, மாவட்டச் செயலாளர்களுடனும் பிரதேச செயலர்களுடனும் கலந்துரையாடி, நடவடிக்கைகளை  மேற்கொண்டிருப்பதாகவும், அவர் தெரிவித்தார்.

இதற்கமைய, முதற்கட்டமாக 30 தொடக்கம் 60 வரையானோருக்கு தடுப்பூசி வழங்கப்படுமெனத் தெரிவித்த அவர், அவர்கள் தொடர்பான விவரங்கள் பிரதேச செயலாளர்கள் ஊடாக சேகரிக்கப்பட்டுள்ளன எனவும் கூறினார்.

தடுப்பூசி போடுவதற்காக, பிரதேச செயலக ஊழியர்களே மக்களை ஒழுங்குபடுத்தி அழைத்துவருவர் என்றும் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றதும் உடனடியாகவே மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கிவிடும் என்றும், கேதீஸ்வரன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X