2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

120 தமிழ்ப் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்

Editorial   / 2019 டிசெம்பர் 31 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எம்.றொசாந்த்

வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் கடமையாற்றும் 120 தமிழ்ப் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு, உடன் அமுலுக்கு வரும் வகையில், வேறு பிரிவுகளுக்கு  இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் இருந்து தென் மாகாணத்துக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சேனநாயக்கவால், இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம், யாழ்ப்பாணம் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் மணல் கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், வாள்வெட்டு வன்முறை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோருடன் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தொடர்பு உள்ளதென்று, சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்த நிலையிலேயே, குறிப்பிட்ட 120 தமிழ்ப் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .