2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

13 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு வழக்கு; சந்தேக நபர் பிணையில் விடுதலை

Menaka Mookandi   / 2012 மார்ச் 30 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

13 வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த உடுவில் கோட்டக் கல்வி அதிகாரிக்கு நிபந்தனையுடன் பிணையில் செல்வதற்கு யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா இன்று வெள்ளிக்கிழமை அனுமதியளித்துள்ளார்.

கடந்த இரு வாரகாலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இச்சந்தேக நபர் மீதான வழக்கு விசாரணை இன்று வெள்ளிக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது. சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் இருந்த 13 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற குற்றசாட்டில் இச்சந்தேக நபர் கோப்பாய் பொலிஸாரினால கைதுசெய்யப்பட்டிருந்தார்.

குறித்த சந்தேக நபர் தொடர்பிலான பொலிஸாரின் புலன்விசாரணைகள் முடிவடைந்துள்ளது எனவும் அவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க வேண்டாம் என சந்தேக நபர் சார்பாக சட்டத்தரணி என்.சிறிகாந்தா வாதாடினார்.

பாதிக்கப்பட்ட சிறுமி சார்பில் சட்டத்தரணிகளான எஸ்.சுகாஸ் மற்றும் மணிவண்ணன் ஆஜராகி சந்தேக நபரின் குற்றங்கள் பாரதூரமானது இவரைப் பிணையில் விடுதலை செய்தால் சமூகத்தில் குழப்பங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தனது வாதத்தில் சுட்டிக் காட்டினார்.

இருவரின் வாதங்களையும் கேட்ட யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராசா, கோப்பாய் பொலிஸ் அதிகாரியிடம் சந்தேக நபரை பிணையில் விடுதலை செய்வதற்கு ஆட்சேபிக்கிறீர்களா? என வினாவியதும் இல்லை எனப் பதிலலித்தனர். இதனை அடுத்து சந்தேக நபரை நிபந்தனையுடனான பிணையில் விடுதலை செய்தார்.

சந்தேக நபர் 50,000 ரூபா காசுப்பிணையிலும் தலா 300,000 ரூபா மூன்று ஆட்பிணையிலும் விடுதலை செய்யப்பட்டார். ஆட்பிணையாளிகளில் இருவர் அரசாங்க உத்தியோகஸ்தர்களாக கட்டாயம் இருக்க வேண்டும் என்பதுடன் வெளிநாட்டுக்கு செல்வது தடை செய்யப்பட்டள்ளது. அத்துடன், பிரதி வெள்ளிக்கிழமைகளில் யாழ்.நீதிமன்ற பதிவாளர் முன்னிவையில் சந்தேகநபரை கையொப்பமிடுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .