2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

15 வருடங்களின் பின் சொந்த வீட்டை பார்வையிட்டவர் அதிர்ச்சியில் மரணம்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 22 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

15 வருடங்களின் பின்னர் தனது சொந்த வீட்டை பார்வையிடுவதற்காக வந்த ஒருவர் வீடு சின்னாபின்னமாக உடைவடைந்திருப்பதைக் கண்டு அதே இடத்தில் வீழ்ந்து மரணமான சம்பவமொன்று யாழ். வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது.  

மேற்படி நபர் திருகோணமலையில் தங்கியிருந்து விட்டு 15 வருடங்களின் பின்னர் வடமராட்சியிலுள்ள  தனது சொந்த வீட்டை பார்வையிடுவதற்காக வந்துள்ளார். இந்த நிலையில், அவரது வீடு சின்னாபின்னமாக உடைவடைந்திருப்பதை கண்டு அதே இடத்தில் வீழ்ந்து அவர் அதிர்;ச்சியில் மரணமானார். இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

வடமராட்சி, அல்வாய் வடக்கைச் சேர்ந்த சுப்பிரமணியம் வல்லிபுரம் (வயது 80) என்பவரே இவ்வாறு மரணமானவர் ஆவர்.  இவரது சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .