Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஜூலை 19 , பி.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணத்தில், மாணவிகள் இருவரை துஸ்பிரயோகத்துக்குட்படுத்திய ஆசிரியர் ஒருவரை, நேற்று (18) கைதுசெய்துள்ளதாக, யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாண நகரை அண்மித்துள்ள பிரபல பாடசாலையொன்றில் தரம் 7இல் கல்வி கற்கும் மாணவிகளே, அப்பாடசாலையில் கல்வி கற்பிக்கும் 48 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் ஒருவரால் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில், யாழ்ப்பாண மாவட்டச் செயலகச் சிறுவர் பாதுகாப்புப் பிரிவினரால் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் (18) செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்தே, குறித்த ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட ஆசிரியரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த பொலிஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .