Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 ஜனவரி 04 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ் தில்லைநாதன்
பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் 19 வயதான யுவதியொருவரை இரண்டு வருடங்களாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தன்னை இரண்டு வருடங்களாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி, வீடியோ படம் எடுத்து மிரட்டியதாகவும், அதனை பிரதேச இளைஞர்களிடம் பகிர்ந்ததாகவும், பிரதேச இளைஞர்களும் தன்னை வல்லுறவுக்கு உள்ளாக்க முயன்றதாகவும் யுவதியொருவர் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து, பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை நகரை அண்மித்த பகுதியொன்றை சேர்ந்த யுவதி ஒருவரே 2 ஆண்டுகளாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இரண்டு வருடங்களின் முன்னர் நிவாரணம் வழங்குவதாக தெரிவித்து, அப்போது 17 வயதாக இருந்த சிறுமியை இரண்டு தமிழ் பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர். ஆட்களில்லாத வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியுள்ளனர்.
அதனை காணொளியாக பதிவு செய்து, அதை வைத்து மிரட்டி, கடந்த 2 வருடங்களாக தொடர் வல்லுறவுக்கு உள்ளாக்கி வந்துள்ளனர்.
தற்போது 19 வயதாகியுள்ள அந்த யுவதி, கடந்த வியாழக்கிழமை திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் அடிப்படையிலும், அவரது வாக்குமூலத்தின் அடிப்படையிலும், அவர் 2 வருடங்களாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகியது தெரிய வந்தது.
இதையடுத்து, நடைபெற்ற விசாரணையில், சம்பவம் நடைபெற்ற போது சந்தேகநபரான பொலிஸ் உத்தியோகத்தர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திலும், பின்பு தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திலும், தற்போது முருங்கன் பொலிஸ் நிலையத்திலும் கடமையாற்றுவது தெரிய வந்தது.
அந்த சந்தேகநபர், சிறுமியை வன்புணர்வுக்கு உள்ளாக்கியபோது எடுத்த வீடியோவை பாடசாலை மாணவர்களுக்கும் வழங்கியுள்ளார்.
தம்மிடமும் வீடியோ இருப்பதாக தெரிவித்து, மாணவர்கள் சிலரும் அந்த சிறுமியை வன்புணர்விற்கு உள்ளாக்க முயன்றதும் தெரிய வந்துள்ளது.
அந்த பொலிஸ் உத்தியோகத்தரின் சொந்த இடமும் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒரு பகுதியே. அவருடன் இணைந்து வல்லுறவுக்கு உள்ளாக்கிய மற்றைய நபர், சிறுமியின் வாக்குமூலத்திலிருந்து அடையாளம் காணப்படவில்லை.
அடையாளம் காணப்பட்ட சந்தேகநபரான பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று செவ்வாய் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.
விசாரணைக்கு சமூமளித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago