2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

2006 இல் காணாமல் போனவர்களின் விபரங்களை யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குவில் சமர்பிக்குமாறு பணிப்பு

Kogilavani   / 2012 மே 09 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்.குடாநாட்டில் கடந்த 2006ஆம் ஆண்டு காணாமல் போனவர்களின் விபரங்களை யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்தார்.

யாழில் 2006 இல் காணாமல் போனவர்கள் தொடர்பாக முறைப்பாட்டாளர்கள் யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வருகின்றபோது,  காணாமல் போனமை தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பிரதியுடனும், காணாமல் போனவர் தொடர்பாக கிராம சேவையாளர் உறுதிப்படுத்திய பிரதி, காணாமல் போனவர் தொடர்பாக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தால் இந்த வழக்கு இலக்கம், காணாமல் போனவர் தொடர்பாக முறைப்பாட்டை உறுதிப்படுத்தும் சாட்சிகளின் சத்தியக் கடுதாசி ஆகியவற்றைக் கொண்டு வரும்படி கேட்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2006 ஆம் ஆண்டில் காணாமல் போனவர்கள் தொடர்பாக சுமார் 500 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர்களில் சிலர் மீண்டு வந்துள்ளதாகவும் ஒருசிலர் வெளிநாடுகளில் வசிப்பது தொடர்பாக முறைப்பாட்டுக்காரர்களினால் காணாமல் போனவர்கள் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X