2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வடமராட்சி கிழக்கில் டெங்கு ஒழிப்பு

Super User   / 2010 ஒக்டோபர் 16 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கர்ணன்)

வடமராட்சி கிழக்கு கிராமத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு வார காலமாகக் பொலிஸாரும் பொது சுகாதாரப் பரிசோதகர்களும் இணைந்து இந்த நடவடிக்கைகளைத் துரித கதியில் மேற்கொண்டு வருகின்றனர்.

மணற்காடு, இடைத்தங்கல் முகாம், அம்பன் கிராமம் ஆகியவற்றில் படையினரும் பொதுமக்களும் இணைந்து சிரமதானப் பணிகளை மேற்கொண்டனர்.

அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் அதிபர் பொ. சிவராசா தலைமையில் டெங்கு விழிப்புணர்வுக் கூட்டமும் டெங்கு நோய் பற்றிய விவரணப் படக்காட்சியும் காண்பிக்கப்பட்டன.

இதேபோல் மணற்காடு றோமன் கத்தோலிக்கத் தமிழ் கலவன் பாடசாலையிலும் விழிப்புணர்வுக் கருத்தரங்கு அம்பன் பொது சுகாதாரப் பரிசோதகர் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுகளில் வடமராட்சி, கற்கோவளம், மணற்காடு, பொற்பதி படைமுகாம்களின் பொறுப்பதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X