Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 21 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
மரபுக் கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட யாழ்ப்பாணம், அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையை அபிவிருத்திக்கு உட்படுத்தி மீளக் கட்டியெழுப்புவதான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குறித்த கைத்தொழில் பேட்டையின் கீழ் 36 சிறுகைத்தொழில் நிறுவனங்கள் செயற்பட்டு வந்த நிலையில் யுத்தம் காரணமாக அவை அழிவடைந்தன. இதனால் குறித்த சிறுகைதொழில் துறையின் மூலம் அன்றாடம் வருமானத்தை ஈட்டிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே இந்தக் கைத்தொழில் பேட்டையினை மீளக் கட்டியெழுப்புவதாக மேற்படி கைத்தொழில் பேட்டையினை மீளக்கட்டியெழுப்பும் யோசனையினை முன்வைத்தார். இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியாதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இதற்காக இந்திய அரசாங்கத்தினால் 174 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளதுடன் கைத்தொழில் அபிவிருத்தி சபை மற்றும் முதலீட்டு சபை ஆகியன இணைந்து 25 மில்லியன் ரூபாவினையும் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
யாழ். மாவட்டத்தில் சிறு மற்றும் மத்தியதர கைத்தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகளை வழங்குவதற்காக சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பில் கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் கடந்த 1971ஆம் ஆண்டு மேற்படி கைத்தொழிற்பேட்டை நிர்மாணிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் அது யுத்த சூழ்நிலை காரணமாக அழிவிற்கு உள்ளாக்கப்பட்டதனால் யாழ் மாவட்ட கைத்தொழிலார்கள் பாதிக்கப்பட்டதுடன் பெருமளவிலானோர் தொழில் வாய்ப்புகளையும் இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (M.M)
30 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago